நீர்கொழும்பு பெரிய முல்லை எனும் அழகிய ஊரில் தாருல் புர்கான் எனும் பகுதி நேர மத்ராஸாவில் இருந்து நேற்றையதினம் (15-05-2020) அஹ்மத் ஜினான் ஷப்கி அஹ்மத் எனும் மாணவன் முழு குர்ஆனையும் மனனம் செய்து முடித்தார், அல்ஹம்துலில்லாஹ்.
இம்மாணவன் இரண்டு கண்களும் பார்வை அற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு உதவியாக இருந்த மத்ரசாவின் அதிபர், நிர்வாகம்,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள், உறவினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
வல்ல நாயன் இம்மாணவனை கபூல் செய்து சிறந்த எதிர்காலத்தை கொடுத்தருள்வானாக!
Mam ThaMseer Imani