குவைத்தில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தோர் உட்பட வெளிநாட்டுப் பணியகத்தின் தலையீட்டில் கடந்த 19 மற்றும் 20ம் திகதிகளில் 437 பேர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.
இவர்களுள், இதுவரை சுமார் 300 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது இதுவரை கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் மாதம் 25ம் திகதியோடு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற நிபந்தனையில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டவர்கள் அதன் பின் தூதரகத்தின் பொறுப்பில் இருந்துள்ள அதேவேளை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாகவே மீள அழைத்துவரப்பட்டிருந்தனர்.
எனினும், ஒரு சிலர் குவைத்திலிருக்கும் போதே கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்ததாகவும் அதனால் தங்கியிருந்த வீடுகளிலிருந்து வெளியாகியதாகவும் சிங்கள ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அப்பேற்பட்டவர்களையும் ஒரே விமானத்தில் அழைத்து வந்திருந்த அரசு தற்போது குவைத்திலிருந்து வந்தவர்களில் கணிசமான தொகையினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது எப்படி? என பரிசோதித்துக் கொண்டிருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மே மாதம் இறுதி வரை பொது மன்னிப்புக்கான காலத்தை நீட்டிக்க குவைத் மறுதலித்திருந்த நிலையில் பெரும்பாலும் சட்டவிரோதமாக தங்கியிருந்தவர்களை அரசு மீள அழைத்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
குவைத்திலிருந்து நாடு திரும்பிய 300 பேருக்கு 'கொரோனா'
Reviewed by ADMIN
on
May 28, 2020
Rating:
