மங்கள சமரவீரவிடம் இரண்டாவது தடவை மீண்டும் விசாரணை


முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவிடம் இரண்டாவது நாளாக இன்று விசாரணை நடாத்தப்படுகிறது.

பொதுச் சொத்து துஷ்பிரயோக விவகாரம் ஒன்றின் பின்னணியில் கடந்த 14ம் திகதி குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்திருந்த நிலையில் இன்றைய தினம் மீண்டும் அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

2019 தேர்தலின் போது வாக்காளர்களை அழைத்துச் செல்ல இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து உபயோகப்படுத்தப்பட்டதன் பின்னணியில் இவ்விசாரணை இடம்பெறுகிறது.
மங்கள சமரவீரவிடம் இரண்டாவது தடவை மீண்டும் விசாரணை  மங்கள சமரவீரவிடம் இரண்டாவது தடவை மீண்டும் விசாரணை Reviewed by ADMIN on May 19, 2020 Rating: 5