பாகிஸ்தானில் ஆயிரத்தைத் தாண்டியது கொரோனா மரணம்பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

இச்செய்தி பிரசுரிக்கப்படும் நேரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1017 ஆக பதிவாகியுள்ள அதேவேளை இதுவரை 48091 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அங்கு 14,155 பேர் குணமடைந்துள்ளதாகவும் அந்நாட்டின் உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்டை நாடான இந்தியாவில் கொரோனா மரணம் மூவாயிரத்தைத் தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் ஆயிரத்தைத் தாண்டியது கொரோனா மரணம் பாகிஸ்தானில் ஆயிரத்தைத் தாண்டியது கொரோனா மரணம் Reviewed by ADMIN on May 21, 2020 Rating: 5