கொரோனா விவகாரத்தில் ஜனாதிபதி டிரம்பின் நடவடிக்கைகள் பெரும் ஆபத்தானவை - ஒபாமாகொரோனாவை கட்டுப்படுத்தும் டிரம்பின் நடவடிக்கைகள் குழப்பமானதாகவும், பெரும் ஆபத்தை விளைவிக்க கூடியதாவும் உள்ளன என முன்னாள் ஜனாதிபதி ஒபாமா கடுமையாக குற்றஞ்சாட்டி இருக்கிறார்.


அமெரிக்காவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 13 லட்சத்தையும் தாண்டி விட்டது. 77000 பேர் அதற்கு பலியாகி உள்ளனர். 


இந்நிலையில், தாம் ஜனாதிபதியாக இருந்த போது பணியாற்றிய அதிகாரிகளுடன் இணையதளம் வழியாக நடத்திய உரையாடல்களில் ஒபாமா, டிரம்ப் மீதான குற்றச்சாட்டுகளை கூறியது அம்பலமாகி உள்ளது.


டிரம்ப் வரும் தேர்தலை மனதில் வைத்து பல மாநிலங்களில் ஊரடங்கை விலக்க நிர்பந்தப்படுத்துகிறார் என ஒபாமா அதில் குற்றஞ்சாட்டி இருக்கிறார். 


தேவையான அளவுக்கு கொரோனா பரிசோதனைகளை நடத்த டிரம்ப் ஏற்பாடு செய்யவில்லை என்பதும் ஒபாமாவின் குற்றாச்சாட்டாக உள்ளது.
கொரோனா விவகாரத்தில் ஜனாதிபதி டிரம்பின் நடவடிக்கைகள் பெரும் ஆபத்தானவை - ஒபாமா  கொரோனா விவகாரத்தில் ஜனாதிபதி டிரம்பின் நடவடிக்கைகள் பெரும் ஆபத்தானவை - ஒபாமா Reviewed by ADMIN on May 11, 2020 Rating: 5