கடந்த நோன்பில் வைத்தியர் ஷாபிக்கு செய்த அனியாயம் இன்று மீண்டும் விரட்டப்பட்டார் சரத் வீரபண்டார.

ADMIN
0 minute read
0


குருநாகல் போதனா வைத்தியசாலையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ள போதிலும் அங்கு மீண்டும் வருகை தந்து நிர்வாக நடவடிக்கைகளில் தலையிட முயன்ற சரத் வீரபண்டாரவை எதிர்த்து அங்கு ஊழியர்கள் அமளியில் ஈடுபட்டதுடன் கூச்சலிட்டு வெளியேற்ற முனைந்துள்ளனர்.

வைத்தியசாலையின் பணிப்பாளராக இருந்த சரத், அரசியலில் இடம்பிடித்துக் கொள்ள முயன்றதுடன் மருத்துவர் ஷாபி விடயத்தைப் புனைந்து பூதாகரமாக்கியதிலும் பங்களித்திருந்தார். அவ்வேளையில் தொடர்ந்தும் வைத்தியசாலையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த சரத் தற்போது ஊழியர்களாலேயே விரட்டப்பட்டு வருகிறார்.


குறித்த நபர், சுகாதார அமைச்சின் விதிமுறைகளை மீறி சர்வாதிகாரமாக நடந்து வந்த நிலையில் ஊழியர்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு வெளியிட்டு, அதனூடாக இடமாற்றம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
To Top