புத்தளம் பகுதியில் உப்பு களஞ்சியசாலை ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட கைக்குண்டு


புத்தளம்-அச்சமலையாறு பிரதேசத்தில் உள்ள உப்பு களஞ்சியசாலை ஒன்றிலிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் செயழிலக்கச் செய்துள்ளனர்.


காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து புத்தளம் நீதவான் நீதிமன்றின் அனுமதியைப் பெற்று குறித்த கைக்குண்டு செயலிழக்கச் செய்ததாக காவல்துறை ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.


இதனைத் தொடர்ந்து கைக்குண்டு இருந்த இடத்திற்கு விரைந்துச் சென்ற அதிரடிப்படையினர் குறித்த கைக்குண்டை செயலிழக்கச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புத்தளம் பகுதியில் உப்பு களஞ்சியசாலை ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட கைக்குண்டு  புத்தளம் பகுதியில் உப்பு களஞ்சியசாலை ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட கைக்குண்டு Reviewed by ADMIN on May 01, 2020 Rating: 5