முச்சக்கரவண்டிகளுக்கான விசேட பரிசோதனை!


வவுனியாவில் பேக்கரி பொருட்களை விற்பனை செய்யும் முச்சக்கரவண்டிகளுக்கான விசேட பரிசோதனையும், விற்பனையாளர்களிற்கான விழிப்புணர்வு கருத்தரங்கும் இன்று சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்றது.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் முகமாக வவுனியா சுகாதார பிரிவினர் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் வழிநடத்தலின் பிரகாரம் சுகாதார வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கு அமைவாக மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் க.மேஜெயா மற்றும் பொதுசுகாதார பரிசோதகர்களான சிவரஞ்சன், கோல்டயன் உள்ளடங்கிய குழுவினரால் முச்சக்கரவண்டிகள் பரிசோதனை செய்யப்பட்டதோடு விழிப்புணர்வு கருத்தரங்கும் மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது பேக்கரி பொருட்களை கொண்டு செல்லும் முச்சக்கரவண்டிகளின் தரம், பொருட்களை நுகர்வோருக்கு வழங்கும் முறை, கையுறைகளின் தன்மை என்பன தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதோடு, ஆலோசனைகளும் வழங்கப்பட்டது
முச்சக்கரவண்டிகளுக்கான விசேட பரிசோதனை!  முச்சக்கரவண்டிகளுக்கான விசேட பரிசோதனை! Reviewed by ADMIN on May 07, 2020 Rating: 5