அலைப்பேசிகள், மறைமுகமாக கொரோனாவை பரப்பும் சாதனங்களாக விளங்குவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Bond பல்கலைகழகம் நடத்திய ஆய்வில், அழைப்பேசியில், ஈ.கோலின் நுண்ணுயிரிகள் அதிகம் காணப்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு நடத்திய ஆய்வாளர், Dr Tajouri இது குறித்து தெரிவிக்கையில், 80 சதவீத நோய்கிரிமிகள் ஸ்மார்ட் போன்கள் மூலம் பரவ வாய்ப்புள்ளது. அதேபோல் ஒருநோயில் இருந்து தப்பிக்க கை கழுவும் பொழுது, முறையாக உங்கள் ஸ்மார்ட் போன்களையும் தூய்மைப்படுத்த வேண்டும்.
நெருங்கிய சமூகத்தில் விரைவாக கொரோனா பரவ ஸ்மார்ட் போன் காரணமாக இருக்கலாம்.
மேலும், Tajouri குறிப்பிடுகையில் கொரோனா தொற்று இவ்வளவு வேகமாக பரவ அடிப்படையில் ஸ்மார்ட் போன்கள் காரணமாக இருக்கும் என்று நான் நினைப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக, ரயில், விமானங்கள் ஆகியவற்றில் பயணிப்பவர்கள் தங்கள் பயணத்தின் முடிவில் ஸ்மார்போன்களை கையில் பிடித்து கொண்டு மீண்டும் மீண்டும் தொடுகின்றனர். இதன் மூலம் வைரஸ் எளிதில் பரவி இருக்கலாம் என்கிறார்.
நாள் ஒன்றுக்கு ஒருவர் கிட்டதட்ட 5,000 முறை ஸ்மார்ட் போனை தொடுகிறாராம் அவ்வாறு இருக்கையில் நீங்கள் கைகளை சுத்தம் செய்கையில் அலைப்பேசிகளையும் சுத்தம் செய்வது மிகவும் அவசியம் என்று தெரிவித்துள்ளார்.