கொழும்பு IDH வைத்தியசாலையில் இடம்பெற்ற நெகிழ்ச்சியான சம்பவம்!!

ADMIN
0 minute read
0



கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் சிறுவன் ஒருவரை IDH வைத்தியசாலை ஊழியர்கள் நெகிழ செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.





சிறுவன் ஒருவரின் எதிர்காலத்தை வெளிச்சமாக்கும் நடவடிக்கை ஒன்றை வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர்.




குறித்த சிறுவன் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் முதல் முறையாக வைத்தியசாலையில் அவருக்கு ஏடு தொடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.




IDH வைத்தியசாலையின் இரண்டாம் இலக்க அறையின் ஊழியர்கள் இணைந்து, அதற்கான நேரங்களை ஒதுக்கி சம்பிரதாய முறையில் ஏடு திறந்துள்ளனர்.


ஏடு தொடக்குவதற்கு எவ்வித குறையும் வைப்பதற்கு ஊழியர்கள் இடமளிக்கவில்லை. வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களின் ஆசிர்வாதத்துடன் குறித்த சிறுவன் கற்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.


வாழ்க்கையின் முக்கியமாக சந்தர்ப்பத்தில் வைத்தியசாலையில் உள்ள குறித்த சிறுவனை வைத்தியர்கள் நெகிழ வைத்துள்ளனர்.
To Top