சஹ்ரானுடன் தொடர்பு வைத்திருந்த NGO பொறுப்பாளர் கைது!


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் சூத்திரதாரியான சஹ்ரான் ஹசீமை அழைத்து வந்து அரச சார்பற்ற நிறுவனத்தின் இளைஞர் குழுவொன்று தீவிரவாதம் சார்ந்த சொற்பொழிவு ஒன்றை நடத்தியதாகவும், ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டு கல்பிடிய பகுதியில் இயங்கிவந்த குறித்த அமைப்பின் (NGO) பொறுப்பாளர் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.

சஹரான் ஹசீமை தவிந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய மேலும் இருவர் குறித்த தீவிரவாத சொற்பொழிவு நடத்தியதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சஹ்ரானுடன் தொடர்பு வைத்திருந்த NGO பொறுப்பாளர் கைது!  சஹ்ரானுடன் தொடர்பு வைத்திருந்த NGO பொறுப்பாளர் கைது! Reviewed by ADMIN on May 03, 2020 Rating: 5