குவைத்தில் இருந்து நாடு திரும்பிய மேலும் ஒருவர் கொரோனாவினால் மரணம்


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 11ஆவது மரணம் இன்று பதிவாகியுள்ளது.

45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இவர் சமீபத்தில் குவைட்டில் இருந்து நாடு திரும்பி ஹோமாகம வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுறுதி செய்யப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது.
குவைத்தில் இருந்து நாடு திரும்பிய மேலும் ஒருவர் கொரோனாவினால் மரணம் குவைத்தில் இருந்து நாடு திரும்பிய மேலும் ஒருவர்  கொரோனாவினால் மரணம் Reviewed by ADMIN on June 01, 2020 Rating: 5