புத்தளம் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் என். ரேகன் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த பரீட்சார்த்த தேர்தலில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, புத்தளம் மாவட்ட செயலாளர் சந்திரஸ்ரீ பண்டார உள்ளிட்ட அரச அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், தேர்தல் திணைக்கள உத்தியோகத்தர்கள் , கிராம உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இன்று காலை 9 மணி முதல் 11 மணிவரை இடம்பெற்ற குறித்த பரீட்சார்த்த தேர்தலில் 603ஏ கரம்பை கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 200 வாக்காளர்கள் வாக்களிப்பில் பங்கேற்றிருந்தனர்.
- ரஸீன் ரஸ்மின்