ஹக்கீம், ரிசாட் போன்றவர்களின் மூலம்தான் முஸ்லிம்களுக்கு பிரச்சினை - பைரூஸ்ஐக்கிய தேசியக் கட்சி ஒரு பரிசுத்தமான கட்சியாகும் இனவாதிகள் எல்லோம் அக்கட்சியை விட்டு வெளியேறிவிட்டார்கள். ரவூக் ஹக்கீம் ஐக்கிய தேசிய கட்சியில்தான் இனவாதிகள் உள்ளனர் என்று கூறியுள்ளார். இது ஏற்றுக் கொள்ள முடியாத குற்றச் சாட்டாகும். அவர் சேர்ந்துள்ள அணியிலேயே இனவாதிகள் உள்ளனர். குறிப்பாக எல்லாக் கடசிகளிலும் இனவாதிகள் உள்ளனர் என்று கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் பைரூஸ் ஹாஜி தெரிவித்தார்.


அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,


இன்று ஐக்கிய தேசியக் கட்சி இரு கூறுகளாகப் பிரிவு பட்டு இருப்பதற்கான காரணம் படலி சம்பிக்க ரணவக்க என்பதை யாரும் மறைக்க முடியாது. அவர் 2025 ஆம் ஆண்டு இந்த நாட்டின் ஜனாதிபதியாக வர வேண்டும் என்ற நோக்கிலேயே அவர் இதைச் செய்தார். இவர் அகதிகளவிலான இனவாதக் கொள்கையுடையவர்.


இந்தப் பாராளுமன்றத் தேர்தல் முடிந்த பிற்பாடு ஐக்கிய தேசிய கட்சியின் அடுத்த தலைவராக சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் இருந்தன. அவர் பொறுமையாக இருந்திருந்தால் நிச்சயம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக வந்திருப்பார். இவருக்கு கொடுக்காமல் எவையும் இருக்க வில்லை. கட்;சியின் பிரதித் தலைமைத்துவப் பதவி வழங்கினார்கள். ஜனாதிபதி வேட்பாளர் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கினார்கள். எல்லா வகையிலான அதிகாரங்களும் வழங்கினார்கள்.


ஐக்கிய தேசிய கட்சிதான் இலங்கையிலுள்ள மிகப் பெரிய கட்சியாகும். ஐக்கிய தேசியக் கட்சியில் படலி சம்பிக்க ரணவக்க அவர்களை அந்த கட்சியிலுள்ளவர்கள் விரும்புவதில்லை. அவர்தான் திட்டம் போட்டு சஜித் பிரேமதாசவின் அரசியல் தலைமைத்துவத்தை இல்லாமற் செய்தவர். சஜித் பிரேமதாச அணியில் தான் இனவாதிகள் அதிகம் இருக்கின்றனர். நடிகர் ரஞ்சன் ராமநாயக பள்ளிகளில் பாங்கு சொல்வது பற்றயும் முஸ்லிம் பெண்கள் முகத்திரை போடுபவது பற்றியும் எல்லாம் பேசியவர் அந்தப்பக்கத்தில் தான் கூட்டுச் சேர்ந்துள்ளனர்.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கூறும் தயாகமகே என்பவர் ஓர் இனவாதியாக இருந்தால் கடந்த பொதுத் தேர்தலின் போது அம்பாறையில் அவர் 190000 க்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று இருப்பாரா? அம்மாவட்ட முஸ்லிம்கள் அத்தனை பேரும் அவருக்கு வாக்களித்தமையிலேயே அவர் பெரு எண்ணிக்கையிலான விருப்பு வாக்குகளைப் பெற்றார். அவருடைய ஆடைத் தொழிற்சாலையில் எமது முஸ்லிம்கள் பெரு எண்ணிக்கையிலானவர்கள் தொழில் புரிகின்றார்கள்.

எங்கள் ஐக்கிய தேசிய கட்சியிலுள்ள எல்லா இனவாதிகளும் கட்சியை விட்டு வெளியேறி விட்டார்கள். தற்போது ஐக்கிய தேசிய கட்சி ஒரு பரிசுத்தமான கட்சியாகும். பௌத்த சமய மக்கள் கூட நம்பிக்கையுடன் பேசக் கூடிய இன்று ஒரே கட்சி ஐக்கிய தேசியக் கட்சி தான் இருக்கிறது. முஸ்லிம்களைப் பாதுகாக்கக் கூடிய கட்சியும் ஐக்கிய தேசிய கட்சிதான். புhடலி சம்பிக்க ரணவக்க, ரஞ்சன் ராமநாயக போன்றவர்கள் இக்கட்சியில் இருந்து வெளியேறி விட்டனர்.


பாடலி சம்பிக ரணவக்கதான் முஸ்லிம்களுக்கு எதிராக முதன் முதலில் புத்தகம் எழுதியவர். இப்பொழுது அவர்கள் எல்லோம் நல்லவர்களாக இருக்கலாம். எல்லாக் கட்சிகளிலும் இனவாதம் பேசக் கூடியவர்கள் இருக்கிறார்கள். ஐக்கிய தேசியக் கட்சியில் தான் இனவாதம் பேசக் கூடிய தயா கமகே உள்ளார் என்று ரவூப் ஹக்கீம் பேசக் கூடாது. இதைப் பற்றிப் பேசுபவர்கள் சிந்தித்து பேச வேண்டும். இன்று ரவூப் ஹக்கீம் ரிசாட் பதியுதீன் போன்றவர்களின் மூலம்தான் இன்று முஸ்லிம்களுக்கு பிரச்சினையாகும். இவர்களின் மீது பெரும்பான்மையின மக்கள் வெறுப்புணர்வைக் கொண்டுள்ளனர். இன்று இவர்களால் தான் முஸ்லிம்கள் நிம்மதி இழந்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஹக்கீம், ரிசாட் போன்றவர்களின் மூலம்தான் முஸ்லிம்களுக்கு பிரச்சினை - பைரூஸ்  ஹக்கீம், ரிசாட் போன்றவர்களின் மூலம்தான் முஸ்லிம்களுக்கு பிரச்சினை - பைரூஸ் Reviewed by ADMIN on June 15, 2020 Rating: 5