எதிர்வரும் தேர்தலில் போட்டியிட போவதில்லை - மங்கள சமரவீர அதிரடி


ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்டத்தின் சார்ப்பில் வேட்புமனு தாக்கல் செய்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர எதிர்வரும் தேர்தலில் போட்டியிட போவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ள நிலையில் அவருக்கு மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக விருப்பு இலக்கம் 8 வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் இன்று முதல் தன்னுடைய பாராளுமன்ற அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது
எதிர்வரும் தேர்தலில் போட்டியிட போவதில்லை - மங்கள சமரவீர அதிரடி எதிர்வரும் தேர்தலில் போட்டியிட போவதில்லை - மங்கள சமரவீர அதிரடி Reviewed by ADMIN on June 09, 2020 Rating: 5