அரசாங்கத்தின் ஊடாக MCC ஒப்பந்தம் அனுமதிக்கப்படுமா இல்லையா என்பது தொடர்பில் தெளிவாக விளக்கத்தை முன்வைக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சேதவத்த பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
MCC ஒப்பந்தம் தொடர்பில் அமெரிக்காவிற்கு அரசாங்கம் தெரிவித்துள்ள கருத்துக்கள் நாட்டிற்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.