நீதிமன்றில் ஆஜராகுமாறு, ரிஷாட் பதியுதீனுக்கு மீண்டும் அழைப்பாணைமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிர்வரும் 29 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையில் ஆஜராகுமாறு தெரிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றினால் நேற்று(08) மீண்டும் அழைப்பாணை வௌியிடப்பட்டுள்ளது.


சுற்றுச்சூழல் நீதி மையத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறித்த மனு இன்று ஜனக் டி சில்வா மற்றும் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன ஆகிய நீதிபதிகள் குழாமின் முன்னிலையில் அழைக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இந்த வழக்குடன் தொடர்புடைய எழுத்து மூல சமர்ப்பணங்கள் காணப்படுமாயின் அவற்றை தாக்கல் செய்யுமாறு அதன் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு இதற்கு முன்னைய வழக்கு தினத்தில் அழைப்பாணை வௌியிடப்பட்டிருந்த போதும் அவர் சார்பில் எந்த சட்டத்தரணிகளும் இன்று நீதிமன்றில் ஆஜராகியிருக்கவில்லை.


அதன்படி, பாதுகாக்கப்பட்ட வில்பத்து வனத்தை அழித்து அனுமதியற்ற கட்டுமானங்கள் மேற்கொண்டுள்ளமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களுடன் தொடர்புடைய எழுத்து மூல சமர்ப்பணங்களை தாக்கல் செய்கிறீர்களா? என்பது தொடர்பில் விடயங்களை விசாரிப்பதற்காக அதன் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள ரிஷாட் பதியுதீனுக்கு இம் மாதம் 29 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு தெரிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றில் மீண்டும் அழைப்பாணை வௌியிடப்பட்டுள்ளது.
நீதிமன்றில் ஆஜராகுமாறு, ரிஷாட் பதியுதீனுக்கு மீண்டும் அழைப்பாணை நீதிமன்றில் ஆஜராகுமாறு, ரிஷாட் பதியுதீனுக்கு மீண்டும் அழைப்பாணை Reviewed by ADMIN on June 09, 2020 Rating: 5