கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ரணிலுக்கு கடும் எதிர்ப்புதேசிய ஊழியர் சங்கம் உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் தொழிற்சங்க தலைவர்களுடன் இன்று (08) சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.


தொழிற்சங்க தலைவர்கள் தமது பிரச்சினைகளை முன்வைக்க முற்பட்ட போது ரணில் விக்கிரமசிங்க குறித்த இடத்தில் இருந்து வௌியேற முற்பட்டமையால் இவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஐக்கிய தேசிய கட்சியின் தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இடையில் இந்த சந்திப்பு சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் இன்று இடம்பெற்றது.


இதில் கட்சியின் உபதலைவர் ரவி கருணாநாயக்க, பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம், புத்தளம் மாவட்ட குழுத் தலைவர் பாலித ரங்கே பண்டார உள்ளிட்ட தரப்பினர் கலந்து கொண்டிருந்தனர்.


பின்னர் தொழிற்சங்க தலைவர்கள் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தமது பிரச்சினைகளை முன்வைக்க முற்பட்ட போது அவர் குறித்த இடத்தில் இருந்து வௌியேற முயற்சித்துள்ள நிலையில் அங்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.


பின்னர் நிலைமையை கட்டுப்படுத்த பாலித ரங்கே பண்டார முயற்சித்த போது அது பயனளிக்கவில்லை.


கட்சித் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் குழு இந்த சந்திப்பில் கலந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் தொழிற்சங்க தலைவர்களின் கடுமையான எதிர்ப்பிற்கு உள்ளாகினர்.


நிலவிய அமைதியற்ற நிலைமையினை தொடர்ந்து ஐக்கிய தேசியகட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் செயற்குழு கூட்டம் ஆரம்பமாகியது.
கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ரணிலுக்கு கடும் எதிர்ப்பு  கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ரணிலுக்கு கடும் எதிர்ப்பு Reviewed by ADMIN on June 08, 2020 Rating: 5