சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கனரக ட்ரக் (flatbed truck) ஒன்றில் அறியப்படாத வகை உயிரினமொன்றும் இலங்கையை வந்தடைந்துள்ளது.
இந்த ட்ரக்கை தனியார் நிறுவனமொன்று இறக்குமதி செய்திருந்தது.
இந்த நிலையில் அந்த உயிரினத்தை கண்டதும், மேல் மாகாண வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அவர்கள் அறிவித்தனர்.
இதனையடுத்து தற்போது அந்த உயிரினம் வனஜீவராசிகள் திணைக்களத்தின் பாதுகாப்பில் உள்ளது.
அத்துடன் இது குறித்து வனஜீவராசிகள் திணைக்களம் நேற்று நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது.