ஜீவன் தொண்டமானுக்கு புதிய நியமனம்.


இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார்.​

ஹட்டன், கொட்டகல பகுதியில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கட்சி அலுவலகத்தில் இன்று (17) காலை கட்சியின் நிர்வாக சபை கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது ஜீவன் தொண்டமானை கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்க அனைவரும் ஏகமனதாக ஒத்துக் கொண்டுள்ளனர்.

அத்துடன் இதுவரையில் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த அனுஷா சிவராஜா கட்சியின் பிரதி தலைவராக நியமிக்கப்பட்டுளள்தாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்சியின் தலைமைத்துவத்திற்கு இதுவைரயில் யாரும் நியமிக்கப்படவில்லை
ஜீவன் தொண்டமானுக்கு புதிய நியமனம். ஜீவன் தொண்டமானுக்கு புதிய நியமனம். Reviewed by ADMIN on June 17, 2020 Rating: 5