ஜிந்துபிட்டி 154 பேருக்கு கொரோனா?

ADMIN
0 minute read
0


கடந்த ஜூலை மாதம் 2 ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட கொட்டாஞ்சேனை - ஜிந்துபிட்டியை சேர்ந்த நபர் மீது மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் அவரின் உடலில் கொரோனா வைரஸ் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.




இறுதியாக மேற்கொள்ளப்பட்ட 5 பி.சி.ஆர் பரிசோதனைகளின் பின்னர் அவரின் உடலில் கொரோனா வைரஸ் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.




அதேபோல், அவருடன் நெருங்கிப்பழகிய நிலையில் கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்ட 154 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.




இதன் காரணமாக குறித்த அனைவரையும் அவர்களில் வீடுகளுக்க அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Post a Comment (0)