ஈரானில் முதல் தடவையாக ஒரே நாளில் 200 பேர் உயிரிழப்பு

ADMIN
0 minute read
0

ஈரானில் கொரோனாவிற்குப் பலியானவர்கள்
எண்ணிக்கை 11,931 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில்,
“ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 200 பேர் பலியாகியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஈரானில் கரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 11,931 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 2,637 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஈரானில் இதுவரை 2,45 688 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் சுமார் 31 மாகாணங்களில் கரோனா தொற்றுப் பரவல் உள்ளது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தற்போது ஈரானின் எல்லைப் பகுதியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

தற்போதைய நிலையில் ஈரான் தலைநகரில் மட்டும் 20 சதவீதம் பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று ஈரான் கரோனா தடுப்புப் பணிக்குழுவின் தலைவர் அலிரேஸா சாலி முன்னரே தெரிவித்திருந்தார்.
To Top