அடையாளம் காணப்பட்டவர்களில் 429 பேர் கைதிகள்.

ADMIN
0 minute read
0

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் அடையாளம் காணப்பட்ட 506 கொரோனா தொற்றாளர்களில் 429 பேர் கைதிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி லுதினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த நபர்களில் 47 பேர் காரியாலய உத்தியோகத்தர்கள் என்பதுடன் 30 பேர் அவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
To Top