போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கைபோதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொலிஸ் தலைமையகத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இந்த விடயம் தொடர்பில் தௌிவுபடுத்தினார்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் உத்தியோகத்தர் மீதான விசாரணைகளை துரிதகதியில் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
விசாரணைகளை நிறைவு செய்வதனூடாக சட்ட மா அதிபரூடாக பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
இந்த குற்றச்செயலில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனையை மீள அமுல்படுத்துமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை Reviewed by ADMIN on July 10, 2020 Rating: 5