பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு?


பாடசாலை கற்றல் நடவடிக்கைகளை மீண்டும் முன்னெப்பதற்கான கால எல்லை மற்றும் தினம் உள்ளிட் விடயங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சிடம், கல்வி அமைச்சு வினவியுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம்.சித்ரானந்த இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான தீர்மானத்தை நாளைய தினம் அறிவிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, 2019 கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை விடைத்தாள் மீள்திருத்தத்திற்காக விண்ணப்பிக்கும் காலம் ஜுலை 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றின் மூலம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு? பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு? Reviewed by ADMIN on July 17, 2020 Rating: 5