கர்தினால் மெல்கம் ரஞ்சித் வெளியிட்டுள்ள விசேட அறிக்கைஇம்முறை பொதுத் தேர்தலில் தனக்கு எவ்வித அறிவிப்பும் இன்றி சில வேட்பாளர்கள் தனது தேர்தல் விளம்பரங்கள் மற்றும் கையேடுகளில் தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்துவதாக கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.


தன்னை சந்திப்பதற்கு வருகை தந்த நேரம் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவர்கள் இவ்வாறு தேர்தல் பிரசாரங்களுக்கு பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.


தான் அல்லது பேராயர் பதவி எந்த ஒரு அரசியல் கட்சியுடனோ அல்லது அரசியல் குழுவுடனோ கட்சி அரசியலில் ஈடுபடவில்லை என அவர் குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கர்தினால் மெல்கம் ரஞ்சித் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை கர்தினால் மெல்கம் ரஞ்சித் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை Reviewed by ADMIN on July 19, 2020 Rating: 5