ரதன தேரரின் முகநூல் கணக்கு முடக்கம்.
தாம் ஒரு இனவாதி எனும் அடிப்படையில் தமது முகநூல் கணக்கு முடக்கப்பட்டிருப்பதாகவும் இது மனித உரிமை மீறல் எனவும் தெரிவித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளார் அத்துராலியே ரதன தேரர்.

இதே போன்று ஞானசார மற்றும் பொது பல சேனாவின் முகநூல் கணக்குகளும் முடக்கப்பட்டிருப்பதாகவும் தாம் இருவரும் சமூக சேவகர்கள் எனவும் இலங்கையில் முஸ்லிம்களால் ஏற்படக் கூடிய ஆபத்துகளை முன் கூட்டியே தெரிவித்தவர்கள் எனவும் அவை தற்காலத்தில் உண்மையாகியுள்ள போதிலும் தமது கணக்குகளை முடக்கி வைத்திருப்பது மனித உரிமை மீறல் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

முகநூல் சமூக வலைத்தளம் தமக்கு சாதகமான தொடர்பாடல் தளமாக இருந்ததாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ரதன தேரரின் முகநூல் கணக்கு முடக்கம். ரதன தேரரின் முகநூல் கணக்கு முடக்கம். Reviewed by ADMIN on July 12, 2020 Rating: 5