ஹோட்டலினுள் இருந்து மீட்கப்பட்ட உரிமையாளரின் சடலம் - மனைவி வைத்தியசாலையில்

ADMIN
0 minute read
0

கெஸ்பாவ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் குறித்த ஹோட்டலினுள் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று (07) அதிகாலை 4 மணியளவில் இந்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் 50 வயதுடைய கெஸ்பாவ பகுதியை சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இவர்கள் தலையின் பின் பகுதியில் காயத்துடன் கட்டிலின் மேல் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த நபரின் மனைவியும் காயங்களுக்கு உள்ளாகி களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர்கள் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என்பவதுடன் பிலியந்தல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
To Top