சஹ்ரானின் பாதுகாப்பு இல்லத்தை முஸ்லிம்களே காட்டிக்கொடுத்தனர் - ரணில் அதிரடி


பயங்கரவாதிகள் பயங்கரவாதிகளாக இருக்கவேண்டும். அவர்களுக்கு இனத்துடன் கூடிய அடையாளத்தை வழங்கக்கூடாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற பிரச்சாரத்தின்போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.


பயங்கரவாதிகள், தமிழர்கள், சிங்களவர்கள் மத்தியில் இருக்கலாம். எனினும் அவர்களை இனங்களுடன் இணைத்து அடையாளப்படுத்தக்கூடாது.


இந்நிலையில் சஹ்ரானின் பாதுகாப்பு இல்லத்தை பிரதேசததில் உள்ள மக்களே படையினருக்கு காண்பித்தமையை ரணில் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இதேவேளை இந்த நாட்டின் பிரஜைகள் யாவரும் இலங்கையர்களாகவே கருதப்படவேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க இதன்போது குறிப்பிட்டார்.
சஹ்ரானின் பாதுகாப்பு இல்லத்தை முஸ்லிம்களே காட்டிக்கொடுத்தனர் - ரணில் அதிரடி சஹ்ரானின் பாதுகாப்பு இல்லத்தை முஸ்லிம்களே காட்டிக்கொடுத்தனர் - ரணில் அதிரடி Reviewed by ADMIN on July 25, 2020 Rating: 5