மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி



இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.




ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த ஒருவருக்கும் மற்றும் கட்டாரில் இருந்து வந்த ஒருவருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.




அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2813 ஆக அதிகரித்துள்ளது.




இதேவேளை, கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்குள்ளான இதுவரையில் 2333 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.




தற்போது, 469 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இதுவரை 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி Reviewed by ADMIN on July 30, 2020 Rating: 5