3 வாக்களிப்பு நிலையங்களில் மறு, வாக்களிப்பை நடத்துமாறு கோரிக்கை


பிரதமர் மகிந்த ராஜபக்ச நிக்கவரெட்டியவில் உள்ள மூன்று வாக்களிப்பு நிலையங்களுக்குள் தனது ஆதரவாளர்களுடன் சென்றார் என குற்றம்சாட்டியுள்ள ஐக்கியமக்கள் சக்தி அந்த வாக்களிப்பு நிலையங்களில் மறுவாக்களிப்பை நடத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித்மத்தும பண்டார இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

குறிப்பிட்ட பிரதேசத்தில் மூன்று வாக்களிப்பு நிலையங்களில் இன்று வாக்குகளிப்பு இடம்பெற்றுக்கொண்டிருந்த சுமார் ஆதரவாளர்களுடன் பிரதமர் மூன்று வாக்களிப்பு நிலையங்களுக்குள் சென்றார் என ரஞ்சித்மத்துபண்டார தெரிவித்துள்ளார்.

இது சுதந்திரமான நீதியான தேர்தலுக்கான வாய்ப்புகளை நிச்சயமாக பாதித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான வேட்பாளர்களின் நடவடிக்கைகளை தேர்தல் ஆணைக்குழு கட்டுப்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள ரஞ்சித்மத்தும பண்டார அதனை செய்ய முடியாவிட்டால் பாதிக்கப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் வேறு ஒரு தினத்தில் வாக்களிப்பை நடத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3 வாக்களிப்பு நிலையங்களில் மறு, வாக்களிப்பை நடத்துமாறு கோரிக்கை 3 வாக்களிப்பு நிலையங்களில் மறு, வாக்களிப்பை நடத்துமாறு கோரிக்கை Reviewed by ADMIN on August 05, 2020 Rating: 5