கரு ஜயசூரிய தலைமையில் இன்று கூடவுள்ள அதிரடி மாநாடு.


அரசியலமைப்பு பேரவை இன்று கூடவுள்ளதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க அறிவித்துள்ளார்.

8 வது நாடாளுமன்றின் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் அரசியலமைப்பு பேரவை கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய முன்னாள் சபாநாயகரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்று பிற்பகல் 4 மணியளவில் அரசியலமைப்பு பேரவை கூடவுள்ளது.

இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கபடுகின்றது.

மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் பொது சேவைகள் ஆணைக்குழுவில் நிலவும் வெற்றிடங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்படும் என நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க அறிவித்துள்ளார்.
கரு ஜயசூரிய தலைமையில் இன்று கூடவுள்ள அதிரடி மாநாடு. கரு ஜயசூரிய தலைமையில் இன்று கூடவுள்ள அதிரடி மாநாடு. Reviewed by ADMIN on August 03, 2020 Rating: 5