7,000 கோடி ஒதுக்கீடு அரசாங்கத்தின் அதிரடி வேலைத்திட்டம் ஆரம்பம்.


 உர மானியம் வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளது.

இதன் கீழ் பெரும்போகத்தில் நெற்செய்கையாளர்கள் ஒன்பது இலட்சம் பேருக்கும் வேறு பயிர்ச்செய்கையில் ஈடுபடும் 12 இலட்சம் பேருக்கும் உர மானியம் வழங்கப்படவிருப்பதாக உர செயலகத்தின் பணிப்பாளர் மஹேஷ் கம்பன்பில தெரிவித்தார்.

நெற் செய்கைக்குத் தேவையான உரம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. மரக்கறி மற்றும் ஏனைய பயிர்களுக்குத் தேவையான உரம் விநியோகிக்கப்படவுள்ளது. இதற்கமைவாக உர மாநியத்திற்காக அரசாங்கம் 7,000 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளது என உர செயலகத்தின் பணிப்பாளர் மஹேஷ் கம்பன்பில மேலும் தெரிவித்திருந்தார்.
7,000 கோடி ஒதுக்கீடு அரசாங்கத்தின் அதிரடி வேலைத்திட்டம் ஆரம்பம். 7,000 கோடி ஒதுக்கீடு அரசாங்கத்தின் அதிரடி வேலைத்திட்டம் ஆரம்பம். Reviewed by ADMIN on September 15, 2020 Rating: 5