பசில் ராஜபக்ஸ கூறியதாக பரபரப்பாக பேசப்படும் விடையத்துக்கு முற்றுப்புள்ளி.


மாகாண சபைகள் கலைக்கப்படுமானால் அதன் அதிகாரங்கள் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படும் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்ததாக வெளிவரும் தகவல்களில் எந்த வித உண்மையும் கிடையாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

அவ்வாறான கூற்றை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச விடுத்ததாக பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டிருந்தாகவும் அவ்வாறு எந்த கருத்தையும் அவர் தெரிவிக்கவில்லை எனவும் கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டெம்பர் 11ஆம் திகதி பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின்போது

'மாகாண சபைகள் கலைக்கப்படுமானால் அதன் அதிகாரங்கள் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படும்' போன்ற ஒரு தகவலை பசில் ராஜபக்ச தெரிவித்ததாக 14ஆம் திகதி திங்கட்கிழமை தினசரி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

அந்த பேச்சுவார்த்தையின் போது பசில் ராஜபக்ச அவ்வாறு எதையும் தெரிவிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்ஸ கூறியதாக பரபரப்பாக பேசப்படும் விடையத்துக்கு முற்றுப்புள்ளி. பசில் ராஜபக்ஸ கூறியதாக பரபரப்பாக பேசப்படும் விடையத்துக்கு முற்றுப்புள்ளி. Reviewed by ADMIN on September 16, 2020 Rating: 5