தீவிரவாதி புலஸ்தினி எனப்படும் சாராவை இலங்கைக்கு நாடு கடத்துங்கள் முஜிபூர் ரஹ்மான்உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டவர் என கருதப்படும் சாராவை இந்தியாவிலிருந்து நாடு கடத்துவதற்கான வேண்டுகோளை இலங்கை அரசாங்கம் விடுக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் சாராவுக்கு நேரடி தொடர்புகள் உள்ளதால் அவரை நாடு கடத்துவதற்கான வேண்டுகோளை விடுக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து சாராவை நாடுகடத்தினால் முக்கியமான தகவல்களை பெறமுடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தில் நான் உதவ தயார் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஆணைக்குழுவின் முன்னிலையில் நான் இதனை தெரிவித்துள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தீவிரவாதி புலஸ்தினி எனப்படும் சாராவை இலங்கைக்கு நாடு கடத்துங்கள் முஜிபூர் ரஹ்மான் தீவிரவாதி புலஸ்தினி எனப்படும் சாராவை இலங்கைக்கு நாடு கடத்துங்கள் முஜிபூர் ரஹ்மான் Reviewed by ADMIN on September 19, 2020 Rating: 5