சஹ்ரானின் தாக்குதலுக்கு முன் மைத்ரிக்கு வந்த தொலைபேசி அழைப்பு விசாரணைகள் ஆரம்பம்.


தாக்குதலுக்கு முன் மைத்திரிக்கு தொலைபேசி அழைப்பு - புலனாய்வு அதிகாரியின் கைத்தொலைபேசியை பறிமுதல் செய்ய உத்தரவு

முன்னாள் தேசிய புலனாய்வு பிரிவின் அதிகாரி நிலாந்தஜயவர்த்தனவின் கையடக்க தொலைபேசியை பறிமுதல் செய்யுமாறு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

காவல்துறையினரை நிலாந்த ஜயவர்த்தனவின் தொலைபேசியை பறிமுதல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆணைக்குழுவின் விசாரணைகளின் போது உயிர்த்தஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் ஜயவர்த்தன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பல முறை தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டமை தெரியவந்துள்ளது.

இந்த நிலையிலேயே அவரின் கையடக்கதொலைபேசியை பறிமுதல் செய்யுமாறு ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

நிலாந்த ஜயவர்த்தனவை ஆணைக்குழு பல முறைவிசாரணைகளுக்கு உட்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சஹ்ரானின் தாக்குதலுக்கு முன் மைத்ரிக்கு வந்த தொலைபேசி அழைப்பு விசாரணைகள் ஆரம்பம். சஹ்ரானின் தாக்குதலுக்கு முன் மைத்ரிக்கு வந்த தொலைபேசி அழைப்பு விசாரணைகள் ஆரம்பம். Reviewed by ADMIN on September 14, 2020 Rating: 5