உண்மையை வெளிப்படுத்திய கோட்டாபய


மரண தண்டனை கைதியான நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவை பதவிப்பிரமாணம் செய்துகொள்ளும்படி 19ஆவது திருத்தத்தில் அமைக்கப்பட்ட சுயாதீன நீதிமன்றமே அறிவித்தது.

இப்படி கூறினார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ.

ஜனாதிபதி செயலகத்தில் இராஜாங்க அமைச்சர்களை சந்தித்த போது அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

“பிரேமலால் ஜயசேகரவின் விடயத்தை எதிர்க்கட்சி பூதாகரமாக்கியது. நானோ, பிரதமரோ வேறு எவரோ எந்தவிதத்திலும் அழுத்தம் கொடுக்கவில்லை. நாம் அழுத்தம் கொடுத்தே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டதாக எதிர்க்கட்சி கூற முற்படுகிறது. அங்கு சிரேஸ்ட தரத்தில் இருந்த ஒரு நீதியரசரே நியமிக்கப்பட்டிருந்தார்.

அவர் அரசியல் அமைப்பு சபையினாலேயே நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அரசியல் அமைப்பு சபையின் தலைவர் கரு ஜயசூரிய, அங்கத்தவர்களாக, சஜித் பிரேமதாச , தலதா அத்துகோரல ஆகியோர் இருந்துள்ளனர்.

எனவே இந்த சபையினால் பரிந்துரைக்கப்பட்டே அவர் நாடாளுமன்றஉறுப்பினராக அனுப்பிவைக்கப்பட்டார். அவ்வாறான ஒருவருக்கு வழங்கப்படும் தீர்ப்பு சரியானது மற்றையவருக்கு வழங்கப்படும் தீர்ப்பு பிழையானதென கூறி மக்களை தவறான வழியில் இட்டுச்செல்ல முற்படுகின்றனர். இதுவே உண்மை,

நாம் எவ்விதத்திலும் எந்த அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை. உயர் நீதிமன்ற நீதிபதிக்கும் அழுத்தம் கொடுக்கவில்லை, மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிக்கும் அழுத்தம் கொடுக்கவில்லை,

உயர்நீதிமன்ற நீதிபதியும் கடந்த அரசியல் அமைப்பு சபையினால் பரிந்துரைக்கப்பட்டவரே இருக்கின்றார். அவரின் சிரேஸ்ட தன்மைக்கு ஏற்ப நியமிக்கப்பட்ட ஒருவர்.” என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
உண்மையை வெளிப்படுத்திய கோட்டாபய உண்மையை வெளிப்படுத்திய கோட்டாபய Reviewed by ADMIN on September 11, 2020 Rating: 5