இம்மாதம் முதல் மாடறுக்கத் தடை


மினுவாங்கொடை நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் 2021 ஜனவரி முதல் மாடு அறுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, மினுவாங்கொடை நகர சபை அறிவித்துள்ளது.

இது தொடர்பில், மினுவாங்கொடை நகர சபைத் தலைவர் நீல் ஜயசேகர அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.


அந்த அறிவித்தலில் அவர், "கெளரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் அவர்களின் ஆலோசனைக்கு அமைய, அமைச்சரவைக் குழுவினரால் சிபாரிசு செய்யப்பட்ட, இலங்கையில் மாடு அறுப்பைத் தடை செய்யும் சட்டத்தின் கீழ், மினுவாங்கொடை நகர சபைக்கு நான் வழங்கிய பணிப்புரைக்கு அமைய, 2021 ஜனவரி 01 முதல், மினுவாங்கொடை நகர சபை எல்லையில் மாடறுப்பு தடை செய்யப்பட்டுள்ளது என்பதை அறிவித்துக் கொள்கின்றோம்" என நகர சபைத் தலைவரினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இம்மாதம் முதல் மாடறுக்கத் தடை இம்மாதம் முதல் மாடறுக்கத் தடை Reviewed by ADMIN on January 14, 2021 Rating: 5