முஸ்லிம் மக்களின் சனத்தொகை அதிகரித்த வண்ணம் உள்ளது. சட்டத்துறையிலும் முஸ்லிம் சமூகத்தினர் அதிகளவில் ஈடுப்பட்டுள்ளார்கள்.!!

 


பொலிஸ் பரிசோதகர் நியமனத்தில் தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றிருப்பது விசேட தகைமையாக கருதப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளமை அரசியலமைப்பின் 12(1) அத்தியாயத்துக்கு முரணாகும். 


மொழி அடிப்படையில் நியமனம் வழங்கினால் முஸ்லிம் இனத்தவர்கள் அதிகளவில் உள்வாங்கப்படுவார்கள். இது அரசியலமைப்புக்கு, நாட்டு மக்களுக்கும் இழைக்கும் துரோகமாகும்.


இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று சுட்டிக்காட்டி தேசத்தை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் எல்லே குணவங்ச தேரர் 12 பேரின் கையொப்பத்துடன் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.


அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நீதியமைச்சர் அலி சப்ரி ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு அமைய பொலிஸ் திணைக்களத்துக்காக பொலிஸ் பரிசோதகர் பதவிக்கு 150 வழக்கறிஞர்களை இணைத்துக் கொள்ளவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


பொலிஸ் பரிசோதகர் பதவிக்கு இணைத்துக் கொள்ளப்படுபவர்கள் தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றுள்ளமை விசேட தகைமையாக கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.இஸ்லாமிய அடிப்படைவாத்துக்கு சார்பான அமையும் மற்றுமொரு செயற்பாடாக இதனை கருத வேண்டும்.


தேசத்தை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் எல்லே குணவங்ச தேரர் 

பாரம்பரிய முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக நாம் செயற்படவில்லை. முஸ்லிம் மக்களை கேடயமாக கொண்டு ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசியல் பலத்தை பிரயோகித்து இஸ்லாமிய அடிப்படைவாதத்தை வலுப்படுத்த முனைகிறார்கள். இவ்வாறான செயற்பாடுகளினால் சாதாரண முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.


நாட்டின் சனத்தொகை அடிப்படையில் பார்க்கையில் தமிழ், சிங்கள மக்களின் சனத்தொகையை காட்டிலும் முஸ்லிம் மக்களின் சனத்தொகை அதிகரித்த வண்ணம் உள்ளது. சட்டத்துறையிலும் முஸ்லிம் சமூகத்தினர் அதிகளவில் ஈடுப்பட்டுள்ளார்கள். 


தமிழ் மொழியில் தேர்ச்சி விசேட தகைமை என்பதை நடைமுறைப்படுத்தினால் முஸ்லிம் சமூகத்தினரில் பெரும்பாலானோர் பொலிஸ் பரிசோதகரர்களாக இணைத்துக் கொள்ள வாய்ப்புண்டு.


முஸ்லிம் அரசியல்வாதிகளின் நோக்கம் தற்போது வெளிப்பட்டுள்ளது. முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்களுக்கு பொருப்பான அமைச்சின் ஊடாக இலங்கை நுகர்வோர் அதிகார சபை, துறைமுக அதிகார சபை ஆகியவற்றுக்கு தமது இனத்தவர்களுக்கு அதிக தொழில் நியமணங்களை வழங்கியுள்ளார்கள்.


குறுகிய காலத்தில் முஸ்லிம் சமூகத்தினர் சட்டக் கல்லூரிக்கு அதிகளவில் உள்வாங்கப்பட்மை சந்தேகத்துக்குரியது. அத்துடன் நீதிமன்ற சேவை மொழி பெயர்ப்பாளர்களாகவும் செயற்படுகிறார்கள். இவ்வாறன நிலையில் பொலிஸ் பரிசோதகரர்களாக முஸ்லிம் சமூகத்தின் வழக்கறிஞர்கள் அதிகம் இணைத்துக் கொள்ளப்பட முயற்சிப்பதன் உள்நோக்கம் அவதானத்திற்குரியது.


ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொள்கையைக்  கொண்டவர்கள் நாட்டில் பலர் உள்ளார்கள். இது பயங்கரவாதி சாஹ்ரான் ஊடாக வெளிப்பட்டது.இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கையைக் கொண்டவர்கள் பௌத்தமத மரபுரிமைகளையும், பௌத்தமத சின்னங்களையும் திட்டமிட்டு அழித்து வருகிறார்கள். அடிப்படைவாத கொள்கையைக் கொண்டவர்கள் அரச தொழில்களுக்கு குறிப்பாக பாதுகாப்பு துறைக்கு இணைத்துக் கொள்வது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் மக்களின் சனத்தொகை அதிகரித்த வண்ணம் உள்ளது. சட்டத்துறையிலும் முஸ்லிம் சமூகத்தினர் அதிகளவில் ஈடுப்பட்டுள்ளார்கள்.!! முஸ்லிம் மக்களின் சனத்தொகை அதிகரித்த வண்ணம் உள்ளது. சட்டத்துறையிலும் முஸ்லிம் சமூகத்தினர் அதிகளவில் ஈடுப்பட்டுள்ளார்கள்.!! Reviewed by ADMIN on January 21, 2021 Rating: 5