சஹ்ரானின் பயிற்சிகளில் பங்கேற்ற குற்றத்தில் 24 வயது பெண் மாவனல்லையில் கைது...!!!

 


தற்கொலை குண்டுதாரி சஹ்ரானின் பயிற்சிகளில் பங்கேற்ற குற்றத்தில் 24 வயது பெண் மாவனல்லையில் கைது செய்யப்பட்டு உள்ளார்.


சந்தேகநபர் பயங்கரவாத புலனாய்வு பிரிவினால் நேற்று மாவனல்லையில் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.


ஏற்கனவே கடந்த டிசம்பரில் ஈஸ்டர் ஞாயிறு குண்டுதாரி சஹ்றான் நடத்திய அதே தீவிரவாத பயிற்சி வகுப்புகளில் பங்கேற்ற 6 பெண்களை போலீசார் கைது செய்து உள்ளனர்.


நேற்று கைது செய்யப்பட்ட பெண்ணின் பல குடும்ப உறுப்பினர்கள் ஏற்கனவே ஈஸ்டர் தாக்குதல் மற்றும் 2019 ல் மாவனெல்லா புத்தர் சிலைகள் சேதமாக்கபட்ட சம்பவம் தொடர்பாக போலீஸ் காவலில் உள்ளனர்.

சஹ்ரானின் பயிற்சிகளில் பங்கேற்ற குற்றத்தில் 24 வயது பெண் மாவனல்லையில் கைது...!!! சஹ்ரானின் பயிற்சிகளில் பங்கேற்ற குற்றத்தில் 24 வயது பெண் மாவனல்லையில் கைது...!!! Reviewed by NEWS on February 20, 2021 Rating: 5