கொரோனா மரணங்கள் 3,900 ஐ கடந்தது!


நேற்றைய தினம் (20) நாட்டில் மேலும் 47 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். 


அதன்படி, 26 ஆண்களும் மற்றும் 21 பெண்களும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர். 


இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,917 ஆக அதிகரித்துள்ளது.


*நாட்டில் மீண்டும் கொவிட் தொற்றாளர்கள் 1,500 கடந்தது*


இன்றைய தினத்தில் (21) மாத்திரம் 1,566 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 


அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 289,539 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 


இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் இதுவரை 263,758 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கொரோனா மரணங்கள் 3,900 ஐ கடந்தது! கொரோனா மரணங்கள் 3,900 ஐ கடந்தது! Reviewed by ADMIN on July 21, 2021 Rating: 5