வாகன விபத்துக்களில் 7 பேர் பலி
கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 


அதில் மோட்டார் சைக்களில் விபத்துக்களிலேயே அதிகளவானவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


கடந்த வாரம் முதல் நாள் தோறும் சுமார் 10 பேர் வாகன விபத்துக்களில் உயிரிழப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமாகிய அஜித் ரோஹண தெரிவித்தார். 


இதேவேளை, வார இறுதி நாட்களில் மது போதையில் வாகன செலுத்தும் சாரதிகள் மற்றும் கவனக்குறைவாக வாகனம் செலுத்தும் நபர்களை கைது செய்வதற்காக விசேட பொலிஸ் நடவடிக்கை செயற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்..

வாகன விபத்துக்களில் 7 பேர் பலி வாகன விபத்துக்களில் 7 பேர் பலி Reviewed by ADMIN on July 21, 2021 Rating: 5