இலங்கை வந்தார் மாலைதீவு ஜனாதிபதி

ADMIN
0 minute read
0


மாலைதீவு நாட்டின் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஹ் இன்று (20) இலங்கை வந்தடைந்தார்.


மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வந்துள்ள அவர், அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் 15 பேர் கொண்ட குழுவினருடன் இலங்கையை வந்தடைந்துள்ளார்.


இலங்கை ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தின் மூலமாக குறித்த தூதுக்குழுவினர் இன்று முற்பகல் 11.30 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளனர்.


இந்த விஜயத்தில் மாலைதீவு வெளியுறவு அமைச்சகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் பங்கெடுத்துள்ளனர்.


தூதுக்குழு இம் மாதம் 23 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருந்து இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

To Top