லொஹான் ரத்வத்தேவுடன் சிறைக்கு சென்றது யார்?

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவுடன் வெலிக்கடை சிறைச்சாலைக்கு தான் சென்றதாக வெளியாகிவரும் செய்தி உண்மைக்கு புறம்பானது என 2021 ஆம் ஆண்டின் திருமதி இலங்கை அழகி புஷ்பிகா டி சில்வா தெரிவித்துள்ளார்.


அதன்படி ,இது தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில், “எனக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது, எனக்கு இது பற்றி எதுவும் தெரியாது, நான்


அங்கு இருக்கவில்லை அத்தோடு அந்த இராஜாங்க அமைச்சருடன் எனக்கு எவ்விதமான தொடர்பும் இல்லை” என தெரிவித்தார்.


மேலும் ,இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே குடிபோதையில் சிறைக்குள் நுழைந்து அங்குள்ள கைதிகளை துன்புறுத்தியதாக தெரிவிக்கப்பட்டு, பல்வேறு தரப்பிலிருந்து வெளிவந்த அழுத்தங்களைத் தொடர்ந்து அவர் சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சினை இராஜினாமா செய்திருந்தார்.

லொஹான் ரத்வத்தேவுடன் சிறைக்கு சென்றது யார்? லொஹான் ரத்வத்தேவுடன் சிறைக்கு சென்றது யார்? Reviewed by ADMIN on September 16, 2021 Rating: 5