வைத்தியசாலையில் கைக்குண்டை வைத்தவர் மற்றும் காரணம் தெரியவந்தது

ADMIN
0 minute read
0


நாரஹேன்பிடவில் அமைந்துள்ள பிரபல வைத்தியசாலை ஒன்றின் கழிவறையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட கைக்குண்டை அங்கு வைத்தவர் தொடர்பில் தெரியவந்துள்ளது. 


அதன்படி, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவரே குறித்த கைக்குண்டை வைத்தியசாலையின் கழிவறையில் வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


கைக்குண்டை அங்கு வைத்த சந்தேகநபர் தானாகவே அது குறித்து வைத்தியசாலைக்கு அறிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


வைத்தியசாலை நிர்வாகத்திடம் இருந்து பணப்பரிசை பெற்றுக் கொள்வதற்காக குறித்த நபர் இவ்வாறுk செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

To Top