இலங்கைவந்துள்ள இந்திய பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
ஏற்கனவே பல அமைச்சுப் பொறுப்புக்களை வகித்திருக்கும் சுப்ரமணியன் சுவாமி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வலுவான நட்புறவுக்காக முன்னிலை வகித்துள்ளார்.
பொருளாதார நிபுணரும் புள்ளியியல் வல்லுநருமான சுப்ரமணியன் சுவாமி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராகப் பொறுப்பு வகித்த காலப்பகுதியில் நடத்தப்பட்ட மாநாடுகளின்போது, விரிவுரையாளராகவும் வருகை தந்து கலந்துகொண்டிருந்தார்.
சுப்ரமணியன் சுவாமியின் இலங்கை விஜயத்தின்போது அவரை சந்திக்கக் கிடைத்தமையிட்டு தான் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.