இலங்கை – பங்களாதேஷ் போட்டி : இருவருக்கு அபராதம்

ADMIN
0 minute read
0
ICC டி20 கிரிக்கெட் தொடரின் நேற்றைய தினம் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டியில், போட்டி விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டிற்காக இரண்டு வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் பந்தவீச தீர்மானித்தது.

அதனடிப்படையில் பங்களாதேஷ் அணி சார்ப்பில் லிட்டன் தாஸ் (Liton Das) மற்றும் மொஹம்மட் நயீம் ஆகியோர் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தனர்

போட்டியின் 6 ஆவது ஓவரை வீசிய லஹிரு குமாரவின் பந்தில் லிட்டன் தாஸ் ஆட்டமிழந்திருந்தார்.

இதன்போது லஹிரு குமார மற்றும் லிட்டன் தாஸிற்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருந்தது.

குறித்த சம்பவம் தொடர்பில் லஹிரு குமாரவிற்கு போட்டி கட்டணத்தில் 25 சதவீதம், பங்களாதேஷ் அணியின் லிட்டன் தாஸிற்கு போட்டி கட்டணத்தில் 15 சதவீதமும் சர்வதேச கிரிக்கெட் சபை அபராதமாக விதித்துள்ளது.

To Top