கொழும்பு ,பழைய சோனகத் தெருவில் இளைஞர் ஒருவர்
வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் வாகனம் ஒன்றில் வந்த இனந்தெரியாத குழுவொன்று கெசெல்வத்த பவாஸ் எனப்படும் இளைஞரை வாளால் வெட்டியும் ,கத்தியால் குத்தியும் கொலைசெய்துவிட்டு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்கள் குறித்து ஆரம்பகட்ட தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறும் பொலிஸார் இது தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்த கெசெல்வத்த பவாஸ், குற்றச் செயல்களுக்காக கைது செய்யப்பட்டு சில காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.