இன நல்லுறவை சீர்குலைக்க துறவிகள் முயற்சி செய்கிறார்கள்



ஆசிரியர் பீட ஆசிரியர் ஹபீசுல் ஹக்

இறக்காமப் பிரதேசத்தைப் பொறுத்தவரை கிழக்கு மாகாணத்தில் இருக்கும் மிகவும் பழமை வாய்ந்த கிராமங்களில் ஒன்று .  இங்கு முஸ்லிம்கள் பெரும் பான்மையாகவும், பெளதர்கள் மற்றும் தமிழர்கள் சிறுபான்மையாகவும்  சக வாழ்வுடனும் புரிந்துணர்வுடனும் வாழ்ந்து வருகின்றார்கள்.

கடந்த 2013 ம்  ஆண்டின் இறக்காமப் பிரதேசத்தின் சனத்தொகை  கணக்கெடுப்பின் படி 15,476 முஸ்லிம்களும்,  997 பெளதர்களும் 346 தமிழர்களும்  இங்கு வாழ்ந்து வருகின்றார்கள் .   இறக்காமப் பிரதேசத்தில்  இறக்காமம் , வரிப்பத்தான்சேனை , வட்டுச்சேனை கிராமம் , குடுவில் , அமிரலி புரம் , நல்லதண்ணி மலை , மஜீட்புரம், சேகு ஒலி  புரம், அரபா நகர் , ஹுசைனியா புரம்,   10 A கிராமம் , சபா நகர் , 11A கிராமம் , முகைதீன் கிராமம் , ஜபல் நகர் , மதீனா புரம்  என்று சுமாராக  16 கிராமங்களில்  முஸ்லிம்கள் செறிவாகவும் கல்மடு , மலையடி , இலுக்குச்சேனை , நியுகுண போன்ற 4 கிராமங்களில் பெளதர்கள் செறிவாகவும் மாணிக்கமடு கிராமத்தில்  தமிழர்கள் செறிவாகவும் வாழ்ந்து வருகின்றார்கள் .

இங்கு இவர்களுக்கு மத்தியில் இருக்கும்  வர்தக உறவும் , மதங்களுக்கிடையிலான உறவும்  மிகவும் பழமைவாய்ந்தது .  தீக்கவாப்பி விகாரைக்கு   பொறுப்பாக இருந்த ஒரு பெளத்த மதகுரு இறந்தமைக்காக இறக்காமம் மற்றும் வரிப்பத்தான்சேனை ஜும்ஆ பள்ளிவாசல் நிறுவக உறுப்பினர்கள் அவருடைய சடங்கில் கலந்து கொண்டு இரங்கள் உரை செய்துள்ளதாக வரலாறு கூறுகின்றது .

அதேபோல் 1990 களில் முஸ்லிம் காங்கிரஸின் இஸ்தாபகர் M.HM அஷ்ரப் அவர்களால்  இலுக்குச்சேனை , நியுகுண என்ற பெளத்த கிராமங்களுக்கு மின்சார வினியோகம் செய்யப்பட்டதாகவும்    இறக்காம பிரதேசவாசிகளால்  இலுக்குச் சேனையில் ஒரு பெளத்த கோயிலுக்கு ஒலிபெருக்கிகள் நன்கொடையாக கொடுக்கப்பட்டுள்ளதாகவும் வரலாற்றுகள் உறுதிப்படுத்துகின்றது.  இப்படி ஒத்தாசையாகவும் சகவாழ்வுடனும் வாழ்ந்துவரும் இறக்காம முஸ்லிம்களுக்கு   மத்தியில் இனவாதத்தை கிழறும் நோக்குடனும் இறக்காமப் பிரதேசத்தில்  பெளத்த கூடியேற்றத்தை அமைக்க வேண்டும் என்ற நோக்கிலும்  ஒரு சில பெளத்த  அரசியல்  இனவாதிகளாலும் ,   திட்டமிட்டப் பட்டு வருகின்றது .

கடந்த 2016 /10/ 29 ம் அன்று சனிக்கிழமை  காலை 10 மணிக்கு அம்பாறை #வித்தியானந்த விரிவனாதிபதி கிரிந்திவெல சோம ரத்ன தேரர் , வித்தியானந்த பிரிவான #மஹிந்த ஹிமி தேரர் மற்றும் கல்முனை #ரண்முத்துகல சங்கரத்ன தேரர்களின் தலைமையில் இறக்காமம் 7 ம் பிரிவான மாணிக்க மடுவில் வைக்கப்பட்ட புத்தர் சிலையால் இறக்காமப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இவர்களின் பின்னணியில் இருப்போர்கள் இன்று தேசியரீதியில் முஸ்லிம்களை எதிர்த்து கோஷம் இடும் இனவாதக் கும்பல் என்பது குறிப்பிடத் தக்கது .

 இவ்வளவு ஆண்டுகாலமும் இறக்காமப் பிரதேச முஸ்லிம்கள் இறக்காமத்தில் இருக்கும் பெளத்தமக்களுடன்   முறண்பாடவும் இல்லை முறண்படப் போவதுமில்லை ஆனால்  இறக்காமப் பிரதேசத்தில் வெளியில் இருந்து சிலை கொண்டு வந்தவர்கள்தான் எங்களுக்கு மத்தியில்  பிளவுகளை ஏற்படுத்த முயற்சி செய்கின்றார்கள் என்று மனதாற கவலையுடன் கூறுகின்றார்கள். ஒருவாரத்தினுல் இதற்கு சரியான முடிவுகளை  அரசு அறிவிக்கும்  என்ற முடிவையும்  காணவுமில்லை செய்திகளை அரசிடம் எடுத்துச் சென்ற எமது முஸ்லிம் பிரதிநிகளையும் காணவில்லை . இப்படி இருக்கின்றது இறக்காமப் பிரதேசத்தின் நிலை

இதனை கட்டாயம்  எமது  அரசு பொருட்படுத்த வேண்டும் .