ஈராக் அறிமுகம்
தலைநகர் = [பக்தாத் ]
பரப்பு = 438317 சதுர K.M.
[169235 சதுர மைல் ]
மக்கள் தொகை = 33.42 மில்லியன் [ 2013 ஐக்கிய நாடுகள் சபையின் கணக்கெடுப்பு ]
பிரதான சமையம் = [இஸ்லாம் ]
பிரதான மொழி = [அரபு மற்றும் குர்திஷ் மொழிகள் ] .
அங்கு இருக்கும் இனங்கள் =
அரேபியர்கள் 75-80% , குர்திஷ்கள் 15-20 % ,
கிறிஸ்தவர்கள் 0.8%
ஏனையோர்கள் 0.5%
[துருக் மோனியர்கள் ,அஸ்ரியர்கள் ]
[ஷீஆ முஸ்லிம்கள் 60-75%]
[சுன்னி முஸ்லிம்கள் 32-37% ]
பிரதான ஏற்றுமதி = சுத்திகரிக்கப்படாத எண்ணெய்கள் .
ஏனைய ஏற்றுமதிப் பொருட்கள் = [ விவசாயம் , கோதுமை , பேரீச்சம்பழம் , பார்லி , திராட்சை] .
முக்கி நகரங்கள் = [கிர்குக் , இப்றீல் , பஸ்ரா , உம்முல் கஸ்ர் ]
வடக்கில் துருக்கியையும் ( 300 km ) கிழக்கில் ஈரானையும் ( 1458 km ) தெற்கில் குவைத்தையும் ( 240 km ) மற்றும் மேற்கில் சவூதி அரேபியாவையும் ( 814 km ) மேற்கில் ஜோர்தான் ( 81 km ) மற்றும் சிரியாவையும் ( 605 km ) எல்லைகளாகக் கொண்டுள்ளது .
ஈராக்கின் புனித நகரங்களாக அந்நஜாப் , காஸிமிய்யா , ஸமாரா, மற்றும் கர்பலா ஆகிய நகரங்கள் ஷீஆக்களின் புனித நகரங்களாகக் கருதப்படுகின்றது . அலி ( ரழி ) அவர்களின் அடக்கஸ்தலம் நஜாபிலும் ஹுஸைன் ( ரழி ) அவர்களின் அடக்கஸ்தலம் கர்பலாவிலும் அமைந்துள்ளது .
02) ஈராக் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பின் பின்னணி .
==============================
01) ஈராக்கின் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றல் .
02) மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கான ஆதரவையும் பாதுகாப்பையும் திரட்டல்
03) மத்திய கிழக்கில் அமைந்துள்ள அரபு முஸ்லிம் நாடுகளின் வளங்களைச் சுறன்டல் .
04 ) அமெரிக்க ஜனாதிபதியக இருந்த புஷ்ஷின் பதவியை தக்க வைத்வைத்துக் கொள்ளல்
05) உலகில் சக்தி வள நுகர்வில் அமெரிக்காவை தொடர்ந்தும் முன்னணியில் வைத்துக் கொள்ளல் .
இப்படியான நோக்கங்களுக்கமைய அமெரிக்க ஜனாதிபதி ஜோஜ் புஷ்ஷும் இஸ்ரேலாலும் கூட்டாக இணைந்து ஈராக்கில் ஜனாதிபதியாக இருந்த சதாம் ஹுஸையின் அணு ஆயுதம் தயாரிப்பதாகக் கூறி 2003 March 20 ல் ஈராக்கை ஆக்கிரமித்தது .
ஈராக்கில் அணு ஆயுதம் இருப்பதாகக் கூறி 2003 மார்ச் 20 ல் இருந்து 2007 ஜனவரி வரை சுமார் 4 ஆண்டுகள் ஆக்கிமித்தில் சுமார் 654.463 ஈராக்கிய பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் மேலும் பல்லாயிரக் கணக்கான அப்பாவி ஈராக்கியப் பெண்களை அமெரிக்கா இராணுவம் கற்பை சீராழித்தது . இதை ஜனாயகம் என்று கூவித்திரியும் ஐக்கிய நாடுகள் சபை கை கட்டி வாய் மூடி மெளனமாக வேடிக்கை பார்த்தது . இந்தத் தகவல்களை பக்தாதில் உள்ள முஸ்தன்சிரியா பல்கலைக்கழகமும் அமெரிக்காவின் John Hopkinson Bloomberg Medical College மும் இணைந்து மேற்கொண்ட கணிப்பீட்டறிக்கையில் வெளியிட்டுள்ளது .
அது போதாமல் ஈராக்கின் வடக்கில் அமைந்துள்ள அபூ கரீப் என்ற சிறையில்வைத்து பல்லாயிரக் கணக்கான வர்களைக் கொன்று குவித்து விட்டு இன்று ஜனநாயகம் என்ற கூவித்திரிகின்றது . இதுதான் அமெரிக்காவின் பஞ்ச தந்திரங்கள்.
03) அமெரிக்கா ஆக்கிரமிப்பால் ஈராக் இழந்தது என்ன ?
==============================
01) ஈராக்கின் பொருளாதார வளம் அழிக்கப்பட்டுள்ளது
02) பெரும் மனித வளம் அழிக்கப்பட்டது
03) ஈராக்கின் பழமையான நாகரீகம் அழிந்துவிட்டது
04) இன்று கூட ஈராக்கில் பிறக்கும் பிள்ளைகள் ஊணமாகப் பிறக்கின்றது.
04) முஸ்லிம் சமூகம் இழந்தது என்ன ?
==============================
ஈராக்கில் பெரும்பான்மை ஷீஆ சமூகத்தை ஆண்ட சுன்னி முஸ்லிம்கள் ஆட்சியை இளந்துவிட்டது .
கட்டுரை ஆசிரியர் ஹபீசுல் ஹக்
About us
Sri Lanka Tamil Islamic Digital Media for Dawah, Sri Lanka Moor News and Culture and Tradition, Politics,Culture, Awareness and helping people. Muslim News in English, Arabic, Sinhala. First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform